kilakkunews.com : Ultimate Tamil news portal

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்!- மேர்வின் சில்வா
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிழையான பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் அவர்களது மதத்தை பின்பற்றுவது அவர்களுக்குள்ள உரிமையாகும். அதனை தடுப்பதற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேச பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 500ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று தட்சனா மருதமடு பாடசாலையில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேர்வின் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அமைச்சர் றிசாத் பதியுதீன், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் மேர்வின் சில்வா பேசுகையில் கூறியதாவது,

இன்று இந்த நாட்டில் யுத்தம் இல்லை. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கெதிரான ஹலால் பிரச்சினையினை ஏற்படுத்தி அதன் மூலம் இனவாதத்தை விதைத்து மனித சுதந்திரத்தை தடுக்கப்பாரக்கின்றனர்.

அன்று விடுதலைப் புலிகள் இங்கிருந்த மக்களை வெளியேற்றினர். இன்று அவர்கள் இல்லை. எனவே இவர்களால் வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்கு வாருங்கள் என்ற அழைப்பினை விடுக்கின்றேன். நீங்கள் மீள்குடியேற வருகின்ற போது அரசாங்கம் உங்களுக்கு தேவையானவற்றை செய்து தர தயாராகவுள்ளது.

பெரியமடு கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மிகுதி மக்களை அங்கு குடியேற்றம் செய்ய அமைச்சர்றிசாத் பதியுதீன் நடவடிக்கையெடுக்கும் போது அந்த இடத்தில் மீள்குடியேற்ற முடியாதவாறு தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

அமைச்சர் றிசாத் அவர்களே! நீங்கள் தைரியமாக அந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யுங்கள். அதற்கு எதிராக வரும் தடைகளையும் சவால்களையும் நாம் எதிர்கொள்வோம். இந்த பணியினை மேற்கொள்ள எனது உதவியும் தேவையெனில் இரு வாரங்களுக்கு இங்கு வந்து உங்களோடு நின்று இந்த பணிக்கு உதவி செய்ய நான் தயாராகவுள்ளேன்.

அதேபோல் அரச அதிகாரிகள் மாறலாம். மத குருமார்கள் மாறலாம். மதகுருமார்களின் பணி மக்களுக்கு நல்லதை எடுத்துரைப்பது. அதனை அவர்கள் செய்ய வேண்டும்.

இது தான் அவர்களது பணி. மக்களது தேவைகளை இனங்கண்டு பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல்வாதிகளாகிய நாங்கள் இருக்கின்றோம். வன்னி மாவட்ட மக்களுக்கு பணியாற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கினறார்.

அரசாங்க அதிபர் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட வேண்டும் அப்போது தான் மாவட்டத்தின் அபிவிருத்தியினை செய்ய முடியும். அதனைவிடுத்து இன ரீதியான பிளவுகளை எற்படுத்தும் பணிகளுக்கு துனைபோய் விடக்கூடாது.

இந்த நாட்டினை வெள்ளையர்களிடம் இருந்து மீட்பதற்காக போராடியவர்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து செயற்பட முடியாது. இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஒரே தேசத்தின் மக்கள் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளார். இனி இந்நாட்டை இன, மத, மொழி, பிரதேச ரீதியாக பிரிக்க முடியாது.

அதற்கு இடமும் கொடுக்கப்படமாட்டாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.

7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
பல்வேறு சாதனைகளை செய்துள்ள இந்திய சிறுவன் ஆர்யன் பாலாஜி (7), ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிளிமாஞ்சாரோ உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்திய கடற்படை அதிகாரியின் மகனான 7 வயதே நிரம்பிய ஆர்யன் பாலாஜி, 2012ம் ஆண்டு மே மாதம் இமயமலையின் எவரஸ்ட் சிகரத்துக்கு செல்லும் முயற்சியாக நேபாளத்தில் 5364 மீட்டர் உயரத்தில் உள்ள முகாம் வரை சென்று திரும்பினார். அதே ஆண்டில் கலாபத்தார் (5554 மீட்டர்) மலை மீதும் ஏறினார். கடந்த மார்ச் மாதத்தில் 8 மீட்டர் உயரத்திலிருந்து கடலில் டைவ் அடித்தார். சிறிய வயதில் இவ்வளவு உயரத்திலிருந்து முதன் முதலில் டைவ் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், ஆப்ரிக்கா கண்டத்தில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலைச் சிகரத்தை (5895 மீட்டர்) அடைந்து அங்கு இந்திய கொடியை நாட்டி சாதனை புரிந்துள்ளார்.

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு?
முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம் கர்ப்பமாக இருக்கும் போது தாம்பத்ய உறவில் ஈடுபடலாமா என்பது தான். கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை அதிக அளவில் சந்திக்கிறார்கள்.பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் இருவரும் மனம் ஒத்த நேரத்தில் உறவில் ஈடுபட வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உறவிற்காக மனைவியை கர்ப்ப பாலத்தில் வற்புறுத்த கூடாது என்றும் கூறியுள்ளனர்.கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அவர்கள் விரும்பும் நெருக்கம் செக்ஸாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆழமான முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக அணைப்பு இவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்காக தாம்பத்யத்தில் ஈடுபட கூடாது என்று அர்த்தமில்லை. கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

இந்த தருணங்களில் வழக்கமான முறை உறவு நிலையான அதாவது மேலே ஆண், கீழே பெண் என்ற நிலையிலான செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டும். பதிலாக இருவரும் அமர்ந்த நிலையிலோ அல்லது ஆண் மீது பெண் என்ற நிலையிலோ கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் நல்லது. மேலும் உறவின் போது நிதானமாக, மெதுவாக இயங்குவது மிக அவசியம்

சைபர் தாக்குதல்கள் தொடர்பில் தெளிவுபடுத்த விசேட கருத்தரங்குகள்
இலங்கை இணயத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல் குறித்து தெளிவுபடுத்த விசேட கருத்தரங்குகள் நாத்தப்பட உள்ளன.

இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவகத்தின் கீழ் இயங்கி வரும் கணனி அவசரப் பிரிவு இந்த கருத்தரங்குகளை ஒழுங்கு செய்துள்ளது.

முதல் கட்டமாக அரசாங்க இணைய தளங்களை நடாத்துவோருக்கு விசேட தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

சைபர் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு இணைய தளங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கும் இந்த கருத்தரங்கு நடாத்தப்பட உள்ளது.

இணைய தளங்களை எவ்வாறு பராமரித்தல், நுழைவுச் சொல் பயன்பாடு, சைபர் தாக்குதலுக்கு இலக்கானால் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை போன்றன குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கமளிக்கப்பட உள்ளது.

சாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்
உடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு பெற்றோரும் யோசிப்பார்கள். ஆனால், ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

‘‘உண்ணும் உணவின் கலோரியை சமநிலைப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தையும் சாக்லெட் கொடுக் கிறது’’ என்கிறார்கள் அங்குள்ள ஆராய்ச் சியாளர்கள். ‘‘பெரும்பாலான சாக்லெட்டுகளில் பால் பொருட்களும் சர்க்கரையும் அதிகம் கலந்திருக்கும். இவை அதிக கலோரிகளைத் தருவதால் உடல் எடை கூடிவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதிக கலோரிகள் மட்டுமே உடல் எடையைக் கூட்டி விடாது என்பது இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது. சாக்லெட் உடலில் அதிக கலோரிகளைச் சேர்த்தாலும், அதை சரியான விகிதத்தில் சேர்த்து உடலை இளைக்கச் செய்கிறது.

சிறிதும் உடற்பயிற்சி செய்யாமலேயே சாக்லெட் சாப்பிடுகிறவர் உடல் இளைப்பது இந்த ஆய்வில் நிரூபணமாகியுள்ளது’’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை நிபுணர், பீட்ரிஸ் கோலம்ப். சாக்லெட் மட்டுமல்ல… எடையைக் கூட்டும் என்று நாம் நினைத்திருந்த வறுத்த உணவு, கேக் போன்றவற்றைக் கூட 600 கலோரி அளவுக்கு எடுத்துக் கொண்டால் அது மனிதர்களின் எடையை பெருமளவு குறைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அவ்வளவு ஏன்… கொழுப்பு உணவுப் பொருட்கள் கூட உடல் எடையைக் குறைக்கும் என்று தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

ஒமேகா-3 என்ற கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமானதாக இருப்பதோடு, உங்களது எடையும் குறைந்து ஸ்லிம் ஆகிவிடலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. இவை எல்லாமே நம்ப முடியாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று நினைக்கலாம். புதிய புதிய ஆராய்ச்சிகள் பல பழைய நம்பிக்கைகளைப் பொய் என நிரூபிப்பது மருத்துவ உலகில் சகஜம்தானே. அதிலும் உடல் எடை விஷயத்தில் நம் வாயைக் கட்டும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான இந்த ஆராய்ச்சிகள் நம் நாக்குக்கும் வயிற்றுக்கும் நல்லதுதானே!

எங்கே தொட்டால் பெண்களுக்குப் பிடிக்கும்?
படுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும். படுக்கை அறையில்

மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த சிற்பி போலத்தான். பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான சிற்பத்தை பெறமுடியும். இல்லையெனில் பாறை உடைந்து அலங்கோலமாகிவிடும்.

படுக்கை அறையில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான். அதேசமயம் எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனராம் பெண்கள். பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.

கூந்தலை வருடுவது

பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கண்களின் மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய் உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்து விட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.

கழுத்தில் காம உணர்வு அதிகம்

கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கைகளின் அக்குள் பகுதி

பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.

வயிற்றில் உற்சாகம்

முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.

பாதங்களில் சரணடையுங்கள்

பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித் தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன்.

அரசு அதிகாரிகள் தலையீட்டால் தமிழகத்தின் பல இடங்களில் விஸ்வரூபம் படம் பாதியில் நிறுத்தம்.
சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கய பிறகு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் விஸ்வரூபம் இன்று திரையிடப்பட்டது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் அறிவுறுத்தலால், தமிழகத்தின் பல இடங்களில் திரையிடப்பட்ட விஸ்வரூபம் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நாகை பாண்டியன் திரையரங்கில் அரசு அதிகாரிகள் அறிவுறுத்தலால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் படத்தை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போல் ஈரோடு வி.எஸ்.பி. தியேட்டரிலும் போலீஸ் அறிவுறுத்தலால் காலை காட்சியில் அரை மணி நேரம் ஓடிய நிலையில் படம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரசிகர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது. கோவில்பட்டியில் படம் தொடங்கும் முன்பே திரையிடுவதை போலீஸ் தடுத்து நிறுத்தினர்.

பட விவகாரத்தில் இன்று தீர்ப்பு விஸ்வரூபம் படத்தில் ஒரு மணி நேர காட்சிகளை நீக்க கோரி அரசு அதிகாரிகள் வலியுறுத்தல்?
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான வழக்குகள் சேன்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற அறிவுறுத்தல் படி கமல் தரப்பும், அரசு அதிகாரிகள் தரப்பும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 1 மணி நேரம் ஓடக் கூடிய காட்சிகளை நீக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு கமல் தரப்பு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக சுமுக தீர்வு காணுங்கள் என்று கமலுக்கு நீதிபதி அறிவுரை கூறியுள்ளார். வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து படத்துக்கு 15 நாள் அரசு தடை விதித்தது. இதை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை பார்த்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். 26ம் தேதி படத்தை பார்த்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. கமல் சார்பாக மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், முஸ்லிம் அமைப்புகள் சார்பாக வக்கீல்கள் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் ஆஜராயினர்.  தடை காரணமாக தயாரிப்பாளருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  எனவே வழக்கை விரைவாக விசாரித்து படத்தை திரையிட அனுமதி கொடுக்க வேண்டும் என கமல் வக்கீல் பி.எஸ்.ராமன் கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ”விஸ்வரூபம் படத்தை பார்த்தேன். இந்த வழக்கில் புதிய மனு தாக்கல் செய்ய விரும்பினால் புதிய மனு தாக்கல் செய்யுங்கள். இதன் மீது நாளை விசாரிக்கிறேன். நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமைதான் முக்கியம். கமல் சென்னை வந்துவிட்டார் என்று கருதுகிறேன். எனவே சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும். விசாரணையை 29க்கு தள்ளிவைக்கிறேன்” என்றார்.

இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல் படி கமல் தரப்பும், அரசு அதிகாரிகள் தரப்பும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 1 மணி நேரம் ஓடக் கூடிய காட்சிகளை நீக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு கமல் தரப்பு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடக்கும் விசாரணையின் முடிவுக்கு பிறகு விஸ்வரூபம் திரைப்படம் திரைக்கு வருமா? வராதா? என்பது தெரிய வரும்.

பெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….
அன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை சகட்டுமேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே…

* ஆண்கள் பெண்களுக்கு தரும் முத்தங்களை பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.

* தங்களது அன்பையும், மகிழ்ச்சியை வெளிபடுத்தும் போதும் முத்தத்தின் மூலமே அவற்றை பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்

* பெண்கள் முத்தத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம். நீங்கள் இந்த விஷயத்தில் எப்படி?

* செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர்களிடையே சுமூக உறவு இருக்க வேண்டுமானால் அவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தம்பதிகளிடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின் போது ஒரு சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.

* மேலும் ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுதால், செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு முத்தமிடுகிறார்களாம். மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.

* முத்தம் விஷயத்தில் ஆண்களைவிட இன்பத்தை அணு அணுவாய் ரசித்து டாப் கியர் வரை போவது பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனராம்.

* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற பழமொழியின்படி, முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அவர்கள் சிப்படையாமல் இருக்க காரணம்.

* மிக முக்கிய விஷயம் தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், தனது துணையை முத்தமிடாமலேயே ‘கிளைமாக்ஸை’ வெற்றிகரமாக முடித்துவிட முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். முத்தம் கொடுக்கக்கூடாது என்ற முடிவில் அவர்கள் களமிறங்கினால் கூட தங்களை மறந்து ஆணுக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.

* பெண் தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெற்று கொள்ள முடியும்.

-இன்னும் பல முத்த ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. எவ்வளவு ஆராய்ச்சிகள் நடத்தி முடிவுகளை அறிவித்தாலும் முத்தம் பற்றிய பல உண்மைகள் புதையலை போல் வந்து கொண்டே தான் இருக்கும் இல்லையா..?

விஸ்வரூபம் தடை விலகுமா? நா‌ளை தீர்ப்பு; சுமுகத்தீர்வு வருகிறது ; பேச்சு நடத்த ஏற்பாடு
சென்னை: 100 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கமலின் பிரமாண்ட விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்படுமா அல்லது மாநில அரசின் தடை ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தொடர்பாக நீதிபதி நா‌ளை அறிவிக்கும் தீர்ப்பில் தெரியவரும். இன்று அறிவிக்கப்படுவதாக இருந்த தீர்ப்பு நாளைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இது தொடர்பாக பேச்சு நடந்து வருவதாக கோர்‌ட் தரப்பில் கூறப்படுகிறது. தடை நீங்கும் பட்சத்தில் தயாராக இருக்கும் டிஜிட்டல் தர தியேட்டர்களில் , நாளையோ நாளை மறுநாளோ விஸ்வரூபம் வெளியிடப்படுகிறது.

முஸ்லிம்களை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தமிழகத்தில் வெளியிட தடை விதித்தது. ஆனாலும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பிற மாநிலங்களில் வெளியிடப்பட்டது. ஆப்கன் பயங்கரவாதம், பரதம், ரா அதிகாரியின் உழைப்பு, காதல் என ஹாலிவுட் தரத்திற்கு படம் விளங்குவதாக அண்டை மாநிலங்களில் பார்த்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

கருத்து சுதந்திரத்திற்கு தடை:

தமிழக அரசின் இந்த தடைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ம.க., ராமதாஸ், இடது சாரி கட்சியினர். நடிகர்கள் ரஜினி, அஜீத்குமார், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் படத்தை திரையிட வழிவகை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். குறிப்பாக கருத்து சுதந்திரத்தில் தலையிடவோ , படைப்புகளுக்கு குறுக்கீடு செய்வதோ நல்லதல்ல என்று வலியுறுத்தியுள்ளனர். கமல் தனது தரப்பில் கூறுகையில்; நான் எப்போதும் இஸ்லாமுக்கு எதிரானவன் அல்ல என்றும், கலாச்சார பயங்கரவாதம் கொண்டு என்னை காயப்படுத்துகின்றனர். அதில் அரசியல் லாபம் பார்க்கப்படுகிறது என்று தனது வேதனையை வெளியிட்டார். ரஜினி தனது கவலையில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய எவ்வளவு சிரமபப்பட்டிருப்பார் என நினைக்கும் போது தனது மனம் கலங்குகிறது , கமல் ஒரு உலக மகா கலைஞன், கலந்து பேசி படத்தை வெளியிட ஆவன செய்ய வேண்டும், என்று கூறினார்.

நீதிபதி படத்தை பார்‌த்தார்:

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விதித்த தடையை விலக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், இந்த படத்தை பார்த்துதான் முடிவு செய்ய முடியும் என்று கூறவே, வடபழநியில் ஒரு பிரபல ஸ்டூடியோவில் சிறப்பு காட்சி ( நேற்று முன்தினம் சனிக்கிழமை ) திரையிட்டு காட்டப்பட்டது. மேலும் அட்வகேட்ஜெனரல், எதிர் தரப்பினர், கொண்ட குழுவும் இந்த படத்தை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. படம் பார்த்து ஆய்வு மற்றும் விசாரணை முடிந்து விட்டபடியால் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பின் அடிப்படையில் விஸ்வரூபம் தனது ரூபத்தை மக்கள் முன் காட்டும்.